தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்

பெருமக்கள் உள்ளவர்தம்
பெருமானை, அமரர்கட்கு
அருமைஒழிய அன்று ஆர்அமுது
ஊட்டிய அப்பனைப்
பெருமைபிதற்றவல்லாரைப்
பிதற்றும் அவர்கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை
அளிக்கும் பிராக்கள்.

பெருமக்களின் பெருமான், அன்றைக்கு, அரிய அமுதமானது தேவர்களுக்கு எளிதில் கிடைக்கும்வண்ணம் ஊட்டிய அப்பன், எம்பெருமான், அவனது தொண்டர்கள் அவனுடைய பெருமையைச் சொல்லிப் பிதற்றுகிறார்கள், அத்தகைய தொண்டர்களின் பெருமைகளைச் சொல்லிப் பிதற்றுகிறவர்கள் யாரோ, அவர்கள்தான் இந்தப் பிறவியிலும் இனி வரப்போகும் பிறவிகளிலும் நம்மைக் காக்கும் தலைவர்கள்.

•••

பாடல் 6

அளிக்கும் பரமனை, கண்ணனை,
ஆழிப்பிரான்தன்னை,
துளிக்கும் நறும்கண்ணித் தூமணி
வண்ணன், எம்மான்தன்னை,
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக்
கொள்ளும் அவர்கண்டீர்
சலிப்புஇன்றி ஆண்டு எம்மைச்
சன்மசன்மாந்தரம் காப்பவரே.

நம்மைக் காக்கும் பரமன், கண்ணன், சக்ராயுதத்தை ஏந்திய தலைவன், தேன் துளிகள் வெளிப்படுகின்ற, நறுமணம் மிக்க மாலையை அணிந்தவன், தூய்மையான மாணிக்கத்தின் வண்ணம்கொண்டவன், நம் தலைவன், ஒளிநிறைந்த சோதிவடிவானவன், எம்பெருமான், அத்தகைய பெருமானை உள்ளத்தில் கொள்கிறவர்கள் யாரோ, அவர்கள்தான் எல்லாப் பிறவிகளிலும் தொடர்ந்து எங்களை ஆள்கிறார்கள், சலிப்பில்லாமல் எங்களைக் காக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.