தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்

பயிலும் சுடர்ஒளி மூர்த்தியை,
பங்கயக் கண்ணனை,
பயில இனிய நம் பாற்கடல்
சேர்ந்த பரமனைப்
பயிலும் திருஉடையார் எவரேலும்
அவர் கண்டீர்
பயிலும் பிறப்பு இடைதோறும் எம்மை
ஆளும் பரமரே.

செறிந்த சுடர் ஒளியாகிய மூர்த்தி, தாமரைக்கண்ணன், அனுபவிப்பதற்கு இனிய பரமன், பாற்கடலிலே யோகத்துயில்கொள்ளும் நம் இறைவன், எம்பெருமான், அத்தகைய பெருமானைச் சேர்வது பெரும்செல்வம், அந்தச் செல்வத்தை உடையவர்கள் யாரானாலும் சரி, எந்தப்பிறப்பிலும் நான் அவர்களுக்கு அடிமை.

••••

பாடல் - 2

ஆளும் பரமனை, கண்ணனை,
ஆழிப்பிரான்தன்னை,
தோளும் ஓர் நான்கு உடைத் தூமணி
வண்ணன், எம்மான்தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப்
பணியும் அவர் கண்டீர்
நாளும் பிறப்பு இடைதோறும் எம்மை
ஆளுடை நாதரே.

நம்மை ஆளும் பரமன், கண்ணன், சக்ராயுதத்தை ஏந்திய தலைவன், நான்கு திருத்தோள்களைக்கொண்ட தூய மணிவண்ணன், நம் தலைவன், எம்பெருமான், அத்தகைய பெருமானைக் கைகூப்பிப் பணிந்து வணங்குபவர்கள்தான் எல்லாப் பிறப்பிலும் என் தலைவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.