/

முதற்பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 10

பிறைச்சந்திரனை அணிந்த சிவபெருமானும்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

செ.குளோரியான்

நெற்றியுள் நின்று எனை ஆளும் நிரைமலர்ப் பாதங்கள் சூடிக்
கற்றைத்துழாய்முடிக் கோலக் கண்ணபிரானைத் தொழுவார்,
ஒற்றைப்பிறை அணிந்தானும் நான்முகனும் இந்திரனும்
மற்றை அமரரும் எல்லாம் வந்து எனது உச்சிஉளானே.

பிறைச்சந்திரனை அணிந்த சிவபெருமானும், நான்முகனான பிரம்மனும், இந்திரனும், மற்ற அமரர்கள் எல்லாரும் வந்தார்கள், நெற்றியில் நின்று என்னை ஆளுகின்ற எம்பெருமானின் மலர்ப்பாதங்களைத் தங்கள் தலையில் சூடிக்கொண்டார்கள், திருத்துழாயைத் திருமுடிமேல் சூடிய அழகனான அந்தக் கண்ணபிரானை வணங்கினார்கள், அத்தகைய பெருமான், என்னுடைய உச்சியில் உள்ளானே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.