/

செ.குளோரியான்

தோள்இணைமேலும் நல்மார்பின்மேலும் சுடர்முடிமேலும்
தாள்இணைமேலும் புனைந்த தண்அம் துழாய்உடை அம்மான்,
கேள்இணை ஒன்றும் இலாதான், கிளரும் சுடர்ஒளி மூர்த்தி,
நாள்அணைந்து ஒன்றும் அகலான், என்னுடை நாவின்உளானே.

இரு தோள்களில், நல்மார்பில், திருமுடியில், திருவடிகளில் குளிர்ந்த, அழகிய துளசிமாலை அணிந்திருக்கும் அம்மான், தனக்கு இணையாக யாரையும் சொல்ல இயலாதவன், கிளர்கின்ற ஒளிவடிவம் கொண்ட மூர்த்தி, எப்பொழுதும் என்னைச் சேர்ந்து நிற்கிறவன், ஒருபோதும் என்னைவிட்டு அகலாதவன், என் நாவில் இருப்பவன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.