/

செ.குளோரியான்

மாயன், என் நெஞ்சின் உள்ளான், மற்றும் எவர்க்கும் அதுவே!
காயமும் சீவனும் தானே, காலும் எரியும் அவனே,
சேயன், அணியன் எவர்க்கும், சிந்தைக்கும் கோசரம் அல்லன்,
தூயன், துயக்கன், மயக்கன், என்னுடைத் தோள்இணையானே.

மாயனான எம்பெருமான் என் நெஞ்சில் உள்ளான், வேறு யார் நெஞ்சிலும் இவன் இவ்வாறு இருப்பதுண்டா! அனைத்துப் பிராணிகளுக்கும் உடலும் உயிரும் அவனே, பஞ்சபூதங்களான காற்று, நெருப்பு முதலானவையும் அவனே, வணங்குபவருக்கு அண்மையில் இருப்பவன், வணங்காதவர்களுக்குத் தொலைவில் இருப்பவன், ஞானிகள் போன்றோராலும் சிந்தித்து அறிய இயலாதவன், தூயவன், சிலருக்கு மனத்திரிவையும் சிலருக்கு மயக்கத்தையும் தருகிறவன், அத்தகைய எம்பெருமான், என்னுடைய இரு தோள்களில் இருக்கிறானே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.