/

முதற்பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 4

எம்பெருமானுடன் அமர்ந்திருக்கும் காதல்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

செ.குளோரியான்

உடன்அமர் காதல் மகளிர் திருமகள், மண்மகள், ஆயர்
மடமகள் என்றுஇவர் மூவர், ஆளும் உலகமும் மூன்றே,
உடன் அவை ஒக்க விழுங்கி ஆல்இலை சேர்ந்தவன், எம்மான்,
கடல்மலி மாயப்பெருமான், கண்ணன் என் ஒக்கலையானே.

எம்பெருமானுடன் அமர்ந்திருக்கும் காதல் மனைவியர் மூவர்: திருமகள், நிலமகள், ஆயர்குலத்தில் பிறந்த இளமகளான நப்பின்னை. எம்பெருமான் ஆளும் உலகங்களும் மூன்றே. முன்பு அவன் அந்த மூன்று உலகங்களையும் ஒரே நேரத்தில் விழுங்கிவிட்டு ஆலிலையில் துயில் கொண்டான். என் தலைவன், கடலைவிடப்பெரிய குணங்களைக் கொண்டவன், மாயப்பெருமான், கண்ணன், என் இடுப்பில் தங்கியிருக்கிறானே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.