/

செ.குளோரியான்

நொந்துஆராக் காதல்நோய் மெல்ஆவி உள்உலர்த்த
நந்தா விளக்கமே, நீயும் அளியத்தாய்,
செந்தாமரைத் தடம்கண் செம்கனிவாய் எம்பெருமான்
அம்தாமத் தண்துழாய் ஆசையால் வேவாயோ?

அணையாத விளக்கே, உன்மேல் எங்களுக்கு இரக்கம்தான் வருகிறது. என்ன ஆயிற்று? சிவந்த தாமரைபோன்ற பெரிய கண்கள், சிவந்த கோவைக்கனியைப் போன்ற வாய் கொண்ட எம்பெருமானின் அழகிய, குளிர்ச்சியான துழாய்மாலைமீது நீ ஆசைகொண்டாயோ? அதனால் நெஞ்சம் வேகின்றாயோ? நோகடிக்கிற, குறையாத காதல்நோய் உன்னுடைய மெல்லிய உயிரை உள்ளிருந்து உலர்த்தியதோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.