/

செ.குளோரியான்

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன், சொல்லுவன் பாவியேன்,
எந்தை, எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே.

திருமாலான செல்வனை வானவர்கள் 'நம் தந்தை, எம்பெருமான்' என்று சொல்லி வணங்குவார்கள், இன்னொருபக்கம், பாவியாகிய நானும் அப்பெருமானை 'நம் தந்தை, எம்பெருமான்' என்று சொல்லிச் சிந்தனை செய்கிறேன், சொல்கிறேனே, இது என்ன வியப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.