/

முதற்பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 6

நெஞ்சமே, நமக்குத் தாயாகவும் தந்தையாவும்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

செ.குளோரியான்

நீயும் நானும் இந்நேர்நிற்கில் மேல்மற்றுஓர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே, சொன்னேன்,
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயும் ஈசன், மணிவண்ணன், எந்தையே.

நெஞ்சமே, நமக்குத் தாயாகவும் தந்தையாவும் இவ்வுலகினில் அவதரித்துள்ள ஈசன், நீலமணிவண்ணன், நம் தந்தை, எம்பெருமான், அவன் விஷயத்தில் நீயும் நானும் இம்முறையில் (அவன் மீது அன்பு செலுத்தி) நின்றால், நமக்கு எந்தவொரு நோயும் வராமல் அவன் பார்த்துக்கொள்வான், சொல்லிவிட்டேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.