

பயன்அல்ல செய்து பயன்இல்லை நெஞ்சே,
புயல்மழைவண்ணர் புரிந்துஉறை கோயில்,
மயல்மிகு பொழில்சூழ் மாலிருஞ்சோலை
அயல்மலை அடைவது அதுகருமம்மே.
நெஞ்சே, பயனற்ற செயல்களைச் செய்வதால் ஏதும் பயன் வராது, மழை பொழிகின்ற மேகத்தைப் போன்ற வண்ணம் கொண்ட எம்பெருமான் விரும்பித் தேர்ந்தெடுத்து எழுந்தருளியிருக்கிற கோயில், பார்க்கிறவர்களையெல்லாம் மயக்கவல்ல அழகிய பொழில்களால் சூழப்பட்ட திருமாலிருஞ்சோலையின் அருகிலுள்ள மலைக்குச் சென்று சேர்வோம், (அப்பெருமானை வணங்குவோம்,) அதுவே நம் கடமை.
***
பாடல் - 4
கரும வல்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுஉறை கோயில்
வருமழை தவழும் மாலிருஞ்சோலை
திருமலை அதுவே அடைவது திறமே.
எளிதில் தீராத கர்மப் பிணைப்புகளையெல்லாம் தீர்த்துக்கொண்டு, எம்பெருமானுக்கு அடிமையாகி, வாழ்வில் உய்வதற்கு நீங்கள் விரும்பினால், அதற்கான வழி இதுதான்: மழைமேகங்கள் தவழ்கின்ற திருமாலிருஞ்சோலை எனும் திருமலைக்கு வாருங்கள், அங்கே, கோவர்த்தனகிரியைக் கையில் எடுத்த எம்பெருமான் பெருமையோடு எழுந்தருளியிருக்கும் கோயிலைச் சென்று சேருங்கள், (அவனை வணங்குங்கள்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு
மீண்டும் நடிக்க வரும் ரம்பா!
வாக்காளர் இறுதிப் பட்டியல்! தருமபுரியில் 12.40 லட்சம் பேர்!
வேலூரில் விஜய் சொன்ன குட்டிக் கதை!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

