இரண்டாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 7, 8
பூமியில் கிடந்த திருக்கோலத்தில்


கிடந்து, இருந்து, நின்று, அளந்து, கேழலாய்க் கீழ்ப்புக்கு
இடந்திடும், தன்னுள் கரக்கும், உமிழும்,
தடம்பெரும்தோள் ஆரத் தழுவும், பார்என்னும்
மடந்தையை மால்செய்கின்ற மால் ஆர் காண்பாரே?
எம்பெருமான் பூமியில் கிடந்த திருக்கோலத்தில், இருந்த திருக்கோலத்தில், நின்ற திருக்கோலத்தில் அருள்செய்கிறான், வாமனனாக பூமியை அளந்தான், வராக அவதாரமாக உள்ளே புகுந்து பூமியை எடுத்துக்கொண்டு வந்தான், பிரளயகாலத்தில் பூமியைத் தனக்குள் மறைத்தான், பிறகு அதே பூமியை உமிழ்ந்தான், வலிமையான, பெரிய தோள்களால் பூமாதேவியை ஆரத் தழுவினான்.
நிலமகளாகிய பூமாதேவிமீது இப்படித் திருமால் பலவிதமாக அன்பு செலுத்தி அவளை மயங்கச் செய்கிறான். அவனது தன்மையை யார் அறிவார்கள்!
•••
பாடல் - 8
காண்பார் ஆர் எம் ஈசன் கண்ணனை? என் காணுமாறு?
ஊண்பேசில் எல்லா உலகும் ஓர் துற்று ஆற்றா,
சேண்பால வீடோ, உயிரோ, மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான், பரந்துளன்ஆம் எங்குமே.
நம் இறைவனான கண்ணனைக் காண்பவர் யார்? எப்படிக் காண்பார்கள்? எல்லா உலகங்களும் சேர்ந்தால்கூட, அவனுடைய உணவாகாது, அவை அவனுக்கு ஒரு சிறிய கவளமாகமட்டுமே இருக்கும். அவனது இருப்பிடமோ எல்லா உலகங்களுக்கும் அப்பாற்பட்டது, அவனது உயிரும் அனைத்து உயிர்களையும்விடச் சிறந்தது, தன்னைத் தவிர மற்ற எந்தப் பொருளையும் விட்டுவைக்காமல் அனைத்திலும் எங்கும் பரந்து விரிந்திருக்கிறான் அவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...