

திரிவிக்கிரமன், செந்தாமரைக்கண் எம்மான், என் செங்கனிவாய்
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்தனன் என்றுஎன்று உள்ளிப்
பரவிப் பணிந்து பல் ஊழிஊழி நின் பாத பங்கயமே
மருவித்தொழும் மனமே தந்தாய், வல்லைகாண் என் வாமனனே.
திரிவிக்கிரமன், செந்தாமரை போன்ற கண்களையுடைய என் தலைவன், சிவந்த கனிபோன்ற வாயில் வெள்ளைப் பளிங்கு போன்ற பற்கள் தோன்றுகிற என் பெருமான் என்றெல்லாம் உன்னைப் பலவிதமாக நினைத்தேன், போற்றினேன், பணிந்தேன், பல ஊழிக்காலம் உன்னுடைய திருவடிகளாகிய தாமரைகளில் கலந்து தொழுதேன்.
இப்படி உன்னை வணங்குவதற்கான மனத்தை நீயே தந்தாய், என் வாமனனே, நீ பெரிய ஆற்றலுடையவன்தான்!
•••
பாடல் 8
வாமனன், என் மரகதவண்ணன், தாமரைக்கண்ணினன்,
காமனைப் பயந்தாய் என்றுஎன்று உன் கழல் பாடியே பணிந்து
தூமனத்தனனாய்ப் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீமனம் கெடுத்தாய், உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே?
வாமனன், என் மரகதவண்ணன், தாமரை போன்ற கண்களைக் கொண்டவன், மன்மதனைப் பெற்றவன் என்றெல்லாம் உன்னுடைய திருவடிகளைப் பாடுவேன், பணிவேன், தூய மனத்தைப் பெற்றுப் பிறவித் துயரத்தை நீக்கிக்கொள்வேன், இவ்வாறு என்னுடைய தீயமனத்தைக் கெடுத்து எனக்கு அருள்செய்தாயே, ஶ்ரீதரா, உனக்கு நான் என்ன செய்வேன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!
சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

