/

செ.குளோரியான்

கேசவன் தமர் கீழ், மேல் எமர் ஏழ் எழுபிறப்பும்,
மாசதிர் இதுபெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா,
ஈசன், என் கருமாணிக்கம், என் செங்கோலக்கண்ணன், விண்ணோர்
நாயகன், எம்பிரான், எம்மான் நாராயணனாலே.

இந்த ஏழு பிறவிகளிலும், இதற்கு முன்பு வந்த ஏழு பிறவிகளிலும், இதற்குப் பின்பு வரும் ஏழு பிறவிகளிலும் என் உறவினர்கள் அனைவரும் கேசவனின் அடியவர்கள், இதனால், அவர்கள் சிறந்த பெருமையைப் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்கள்.

ஈசன், என்னுடைய கருத்த மாணிக்கம், என்னுடைய சிவந்த, அழகிய கண்ணன், விண்ணோர் தலைவன், எம்பிரான், எம்மான், அந்த நாராயணன் எங்களுக்குச் செய்த சிறப்புதான் எப்பேர்ப்பட்டது!
•••

பாடல் - 2

நாரணன், முழு ஏழ் உலகுக்கும் நாதன், வேதமயன்,
காரணம், கிரிசை, கருமம் இவைமுதல்வன், எந்தை,
சீர்அணங்கு அமரர், பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான், என் மாதவனே.

நாராயணன், அனைத்து உலகங்களுக்கும் தலைவன், வேதமயமானவன், காரண, காரிய, பலன்களுக்கு முதல்வன், நம் தந்தை, சிறப்பு நிறைந்த அமரர்கள், பிறர் என அனைவரும் தொழுது போற்றும்படி குவலயாபீடம் என்ற யானையின் கொம்புகளை ஒடித்தவன், அத்தகைய பிரான், என்னுடைய மாதவன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.