இரண்டாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 3,4
வெள்ளம்போன்ற உன் புகழிலே நான் மூழ்குகிறேன்


தாமரைக்கண்ணனை, விண்ணோர் பரவும் தலைமகனை
துழாய்விரைப்
பூமருவு கண்ணி எம்பிரானை, பொன்மலையை
நாம் மருவி, நன்கு ஏத்தி, உள்ளி, வணங்கி நாம்
மகிழ்ந்து ஆட நா அலர்
பாமருவி நிற்கத்தந்த பான்மையே வள்ளலே.
தாமரைக்கண்ணன், விண்ணோர்கள் போற்றுகின்ற தலைமகன், நறுமணம் நிறைந்த மலர்களைச் சேர்த்துக்கட்டிய துளசிமாலை அணிந்த எம்பிரான், பொன்மலை, அத்தகைய பெருமானை நாம் அணுகுகிறோம், நன்கு போற்றுகிறோம், அவனை எண்ணி வணங்குகிறோம், மகிழ்ந்து ஆடுகிறோம், அவனது புகழ்பாடும் பாடல்கள் நாவில் தோன்றுகின்றன, இவை அனைத்தும் வள்ளலான அவனது அருள்.
•••
பாடல் - 4
வள்ளலே, மதுசூதனா, என் மரகதமலையே, உன்னை
நினைந்து
எள்கல் தந்த எந்தாய், உன்னை எங்ஙனம் விடுவேன்?
வெள்ளமேபுரை நின்புகழ் குடைந்து ஆடிப்பாடிக் களித்து
உகந்துஉகந்து
உள்ளநோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்ததே.
வள்ளலே, மதுசூதனா, என் மரகதமலையே, உன்னை நினைத்து நான் உன்னிலேயே மூழ்கிவிடும்படி செய்த என் தந்தையே, உன்னை நான் எப்படி விடுவேன்? (விடமாட்டேன்!) வெள்ளம்போன்ற உன் புகழிலே நான் மூழ்குகிறேன், ஆடுகிறேன், பாடுகிறேன், மிகவும் மகிழ்கிறேன், அதனால், என்னிடம் உள்ள நோய்களெல்லாம் தீர்ந்துவிடுகின்றன, நான் உய்வடைகிறேன், என்றும் உன் திருவடியைச் சேர்ந்திருக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...