மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

என்றும் என் இதயத்தில்: பாவலர். இராம இளங்கோவன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

வானத்தை விற்பனைக்கு      விலைபேசி விற்கின்றார்; கானலையும் தண்ணீராய்      காசுக்கு விற்கின்றார்; ஆனவரை பணத்திற்காய்       அடிமையாகி போகின்றார்; ஈனரிவர் செயல்யாவும்       என்றும்என் இதயத்தில்! அழுக்கெல்லாம் மேகமாக        அழுதிடவே  துடிக்கிறது; வழுக்குகிற பாசிகளோ         வழுக்கிவிழ  செய்கிறது;அழுதிடவே பிறந்தவர்போல்          உழவரவர்  அழுகின்றார்; எழுச்சியின்றி துயரெல்லாம்          என்றும்என் இதயத்தில்! கல்விக்கோர் விலையென்று     கலவிக்கோர் விலையென்றுபுல்லர்க்கோர் விலையென்று     நல்லோர்க்கோர் விலையென்றுஎல்லோர்க்கும் விலைவைத்து      எளியோரை வதைக்கின்றார்; எல்லாமே ஈரமாக      என்றும்என் இதயத்தில்! மாறாத வடுவாகி      மனிதமற்ற செயல்களாலே தீராத கொடுமையாகி      தினந்தோறும் துடிப்பதாலே ஆராத புண்ணாகி       அன்றாடம் ஏக்கமுண்டு;ஏறாத வாழ்வெண்ணி       என்றும்என் இதயத்தில்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.