என்றும் என் இதயத்தில்: செந்தில்குமார் சுப்பிரமணியன்


எனக்குள் இருக்கும் இதயக் கமலத்தில் இருக்கிறது
ஏராளமாய் எண்ண அலைகளும்- வண்ண நினைவுகளும்.
எப்போதும் கடிந்து பேசாத
அப்பா தப்பாமல் பாசத்தால்
அரவணைத்த தாய்,
என்னையே உலகமென சுற்றி வரும் இல்லாள்,
தனக்கில்லாமலும் எனக்கு உணவளித்த நண்பன்,
பணம் என்னடா - பணம் என்று
கொடுத்து உதவிய உறவுகள்
குளிருக்கு பயந்து மழைக்கு ஒதுங்கிய நாட்களில்,
பரிச்சயமற்றவர்கள் தந்துதவிய தேனீர்,
ஆரஞ்சு நிற ஆகாயத்தில்
வெள்ளி விளாறாய் கோட்டு மேகங்கள்,
எப்போதோ யாரோ இழைத்த துரோகத்தால்
குமுறிய இதயத்தை தாலாட்டிய மெல்லிய இசை,
ஆதரவளித்தவரின் அவசர மரணம்,
இப்படி எல்லாவற்றையும்
சொல்ல நினைக்கும்
இதயத்திற்கு தெரியாது,
எதுவும் நிரந்தரமில்லை என்று,
ஆனாலும் நாளை நமதே என்று
உற்சாகமாய் பூரித்து விம்மும்,
எனக்குள் இருக்கும் இதயம்.
அதற்குள் நீயும் இருப்பதால்தான்
இந்த பூரிப்போ? !! இறைவா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...