மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

என்றும் என் இதயத்தின்: பாவலர் கருமலைத்தமிழாழன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

என்தாயின்  குருதிவழி   என்னுள்  வந்தே            என்குருதி   தனில்கலந்து   நின்ற  வள்நீஎன்தாயின்  தாலாட்டுப்   பாட்டில்  வந்தே            என்செவியின்  உள்நுழைந்து   ஒலிப்ப  வள்நீஎன்தாய்தான்  கைபிடித்தே   அம்மா  வென்றே            என்கையால்  எழுதிவைக்க   நிலைத்த  வள்நீஎன்தாய்க்கும்   தாய்வழியே   வந்த   தமிழே            என்றுமென்றன்   இதயத்தின்   துடிப்பே   நீதான் !முத்தான  ஐந்துவகை  இலக்க  ணங்கள்            மூத்தசிறு  காப்பியங்கள்   வாழ்வை  ஏத்தும்சத்தான   திருக்குறளும்  பத்தும்  எட்டும்            சமயத்தின்  திருமுறைகள்  பிரபந்   தங்கள்சித்தர்தம்   மருத்துவங்கள்   மடமை   ஓட்டும்            சீர்திருத்த  பாரதிபா  வேந்தர்  பாட்டால்எத்திசையும்   புகழ்மணக்க   ஒளிரும்  தமிழே            என்றுமென்றன்   இதயத்தின்   உயிர்ப்பே   நீதான் !கூத்திற்கு   விதிவகுத்தும்   இசைநு  ணுக்கம்            கூறுகின்ற   நூல்வடித்தும்   ஐம்பூ  தத்தால்பூத்திருக்கும்  உலகத்தை   ஐந்தி  ணையாய்ப்            புலம்பிரித்தே   ஆட்சிசெய்யும்   தமிழே  தாயே !யாத்திடவே   கவிதைகளை  என்னுள்   நின்று            யாவருமே   போற்றுகின்ற   கவிஞ  னாக்கிஏத்தியெனைக்   காப்பதனால்  என்றும்  நீதான்            என்னுடைய   இதயத்தின்   உயிரே  என்பேன் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.