யார் இட்ட சாபம்: கே.நடராஜன்


இதோ வந்து விட்டது புதிய விடியல்
பிறந்து விட்டது புதிய பாரதம் !
புதுமை பல காண்போம் நாம் !
நமக்கு நாமே இனிமேல் !
சுதந்திர இந்திய விடியலில் என்
தாத்தாவும் அப்பாவும் கேட்ட
முழக்கம் இது ! நான் பிறக்கவே
இல்லை அப்போது !
ஒரு அப்பாவாக , தாத்தாவாக நான்
இன்றும் கேட்கிறேன் அதே முழக்கம் !
ஆட்சியும் மாறுது ....காட்சியும் மாறுது !
புதிய விடியல் , புதிய பாரதம் முழக்கம்
மட்டும் மாறவே இல்லையே !
பழகி விட்டேன் நானும் இந்த முழக்கம்
தினம் தினம் கேட்டு !
புது விடியல் மட்டும் நான் காண
முடியவில்லையே இன்னும் !
இது யார் இட்ட சாபம் ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...