2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

யார் இட்ட சாபம்: கலைபரமேஷ்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

ஈரம் பட்ட கையோடு என்னை முதல் முறை தொட்டாயேஅந்த தொடுதலில் சிலிர்த்து போனேன் நான் பிறந்த பொழுது.வேலை முடித்து மாலை வந்ததும் என் கன்னங்களை தொட்டாயேமுகம் சுளித்து மூக்கைப் பொத்தி ஓடினேன்….ஆசை ஆசையாய் எனக்கு பிடித்த பண்டத்தை வாங்கிவந்தாய் - அதைஉன் கையால் ஊட்டி விட உதறி தள்ளி கதவை சாத்தினேன் - என் பத்து வயதில்.முகம் சுளித்து மூக்கைப் பொத்தி ஓடிய என்னை என் மகன் –இன்றுஇந்த மனித மலம் அள்ளிய கையால் தொடும் பொழுதுச்சீ என்கிறான்.நான் பிறந்திருக்கையில் உணர்ந்த அதே சிலிர்ப்பை அனுபவிக்கிறேன்நாள் முழுக்க கழிவுகளை அள்ளிய அந்த ஈரத்தால் வந்த – ஜன்னியில்.வெளுத்து போன என் கையில் உண்ணும் ஒவ்வொரு முறையும்அள்ளிய மலங்களின் வாடையே என் வயிற்றுப் பசியை தீர்க்கிறது.அன்று உன் கைகளை தட்டி விட்டதை நினைத்து வரும்கண்ணீரிலே கழுவி கொள்கிறேன் – அந்த பாவத்தை…உன் மகளாக இந்த சமூகத்தில் பிறந்தது தான் தவறா …..யாரிட்ட சாபம் அப்பா இது இத்தனை மாறியும்இந்த வாடை நம்மை விடவில்லையே …நீ இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டேனே இப்பொழுதாவதுஊட்டி விடுப்பா எனக்கு………

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.