விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஒருமுறையேனும்: ரெத்தின.ஆத்மநாதன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:26 pm

கவிதைமணி

ஒருமுறையேனும்... உண்மையாய்  நேர்மையாய் உளம்விரும்பிமக்களின்   நலனில்   மகத்தான   விருப்பங்   கொண்டேஅரசியல்வாதிகள் அத்தனைபேரும்  செயல் பட்டாலேசிரமங்கள் மறைந்து சிரித்திடாரோ சாமானியர்கள்?!ஒருமுறையேனும்... உளத்தின் ஆழத்தில் நினைத்து எல்லாம்   வல்ல    இறைவனோடு     ஒன்றிநல்லதே   நடக்க   நயவஞ்சகம்    ஒழித்து இறைஞ்சிக் கேட்டால் இல்லையென்பானோ இறைவன்?!ஒருமுறையேனும்...காந்தியாய் நம்மை உருவகஞ்செய்துஉண்மையை    மட்டுமே    உளமெங்கும்    நிறைத்துசெய்யுந்   தொழிலை    தெய்வமென    மதித்து நடந்து கொண்டால் நாமுய்வோம் நன்றாய்!ஒருமுறையேனும்...வாஞ்சிநாதன்,  வ.ஊ.சி.,கட்டபொம்மன்பட்ட   துயரைப்    படித்தாவது     அறிந்தால்சுதந்திரம்   மீது நமக்கு   சொல்லொணாப்   பற்றுவெள்ளமென பெருகும்! வீண்ஜம்பங்கள்  குறையும்!ஒருமுறையேனும்...வள்ளுவன்வகுத்த  வான்குறள் தன்னைசெம்மையாய்ப்   படித்து    சிறப்பாய்    அதன்படிநடந்தே   காட்டினால்   நானிலம்   மெச்சும்பிறந்த பயனையும் பெருமையாய் அடையலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.