விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஒருமுறையேனும்:  பொன். குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:26 pm

கவிதைமணி

ஒருமுறையேனும்குறைந்தபட்சம் நகராட்சி உறுப்பினராகிவிடும்நப்பாசையில்அரசியலில் ஈடுபட்டு வருகிறான்அரசியல்வாதி. ஒருமுறையேனும்இமயமலை ஏறிடவேண்டுமெனதீவிர இலட்சியத்துடன்இயங்கிக் கொண்டுள்ளான்மலையேற்ற வீரன். ஒருமுறையேனும்சுதந்திர காற்றைச் சுவாத்திடஏங்கிக் கொண்டுள்ளான்இலங்கைத் தமிழன். ஒரு முறையேனும்கடவுளைக் கண்டுவிட வழிபட்டுக்கொண்டுள்ளான்பக்தன். ஒருமுறையேனும் சேரிக்குள் தேர் வரவேண்டுமென்றுபோராடிக்கொண்டுள்ளான்தலித். ஒருமுறையேனும்தமிழ்நாட்டைதமிழன் ஆளவேண்டுமென்றுதவமிருக்கிறான்தமிழன். ஒரு முறையேனும்..... ஒருமுறையேனும்மனிதராக வாழ்ந்து மரணிக்க வில்லை எவரும்.... 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.