/

ஒரு முறையேனும்: கலைபரமேஷ்.ம

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:26 pm

கவிதைமணி

அரைசான் வயிற்றுக்குள் அடங்கி வாழ்ந்தவள் பிறக்கிறாள்கனவோடு – சூளையில் அம்மா வயிற்றில் மிதிப்பட்டபொழுது.வலியோடு கத்திய அம்மாவின் கதறலை இவள் குரல் – அடக்கியது.மாவீரனாக தோளில் அப்பா அவளை தூக்கிய பொழுதுஅதே பிரசவ கடனிற்காக மிதித்தனர் - இம்முறை அப்பா.செம்மண்ணின் நிறம் சிகப்பாக மாறியதுஇவனின் இரத்தம் சொட்ட….அதே மண் அவன் இரத்ததில் கலந்ததது காயத்தின் மீதுஅவள் பூசிய மண்ணாகவருடங்கள் கடந்தன, செங்கல்களுக்கு இவள் கைகள்உயிர்கொடுத்தன – தீயில் எரிந்து முழு உயிர்பெற்றது.தினம் தினம் நினைத்துக்கொண்டால் ஒரு முறையேனும்இந்த அடிமைத்தனத்தை எரிப்போம் செங்கல்களை போல்இறுதியில் தீயில் கருகியது செங்கல்கள்……..                                                               

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.