ஒரு முறையேனும்: அ.வேளாங்கண்ணி

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:26 pm

ஒரு முறையேனும் கோபப் படுநீயும் வாழும் மனிதன் அன்றோ?ஒரு முறையேனும் சிரித்து விடுசிரிப்பு மனிதனின் வரமும் அன்றோ?ஒரு முறையேனும் அழுது விடுஅழுதால் வலிகள் அடங்கும் அன்றோ?ஒரு முறையேனும் மன்னிப் பாய்அதனால் உனக்கொரு இழப்பும் இல்லைஒரு முறையேனும் எண்ணிப் பார்எதனால் என்றொரு கருத்தும் வரும்ஒரு முறையேனும் உன்னைப் பார்நீயும் உன்னையே உணர்ந்து கொள்வாய்ஒரு முறையேனும் தானம் கொடுகொடுத்தபின் இன்னும் தர முயற்சியெடுஒரு முறையேனும் திருப்பிக் கொடுஅடக்கி வைத்தென நன்மை பெற்றாய்ஒரு முறையேனும் மரத்தை நடுவெட்டிய பாவத்தை கழுவிக் கொள்ளஒரு முறையேனும் மௌனம் பற்றுபேசியே எத்தனை குழிகள் கண்டாய்ஒரு முறையேனும் ஊரைச் சுற்றுபடைத்தவன் தன்னையே மதிக்கும் படிஒரு முறையேனும் மொழிகள் கற்றுஉனக்கு நீ பேசிடு அற்புதமேஒரு முறையேனும் அமைதி கொள்ளுஉள்ளத்தின் துயரங்கள் அடங்கும் பாருஒரு முறையேனும் அடங்கி நில்லுஎட்டாத உயரங்கள் கிடைக்கும் பாருஒரு முறையேனும் நல்லது சொல்லுபொல்லாத சொற்களெல்லம் ஓடும் பாருஒரு முறையேனும் வாழ்ந்து விடுவாழ்க்கை என்பது அழகாய் வாழ்வதற்கேஒரு முறையேனும் வாழ்ந்து விடுவாழ்க்கை எல்லோரையும் சிறப்பாய் வாழ்த்துவதற்கேஒரு முறையேனும் வாழ்ந்து விடுஇப்போ வாழாமல் எப்போதான் வாழ்வோம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...