தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வெல்லும் சொல்: அழகூர். அருண். ஞானசேகரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

வெல்லும்சொல் பலவுண்டு, விவேகமும் அதிலொன்று;நல்விதமாய் இன்னதனை நாமுணர்ந்து--வல்லமையைமூலதனம் என்றாக்கி முன்னேற்றந் தனைகாண்போம்;சீலம்மிக்க வாழ்வுக்கே சிறப்பு!வெல்லும்சொல் இன்னதெனும் விளக்கமதைக் கொண்டிட்டுஅல்லும் பகலுமே அயராமல்--நல்வழியில்பாடுபட்டு உழைப்போர்க்கு பலன்கிட்டா திருந்திடுமோ?கேடுவரக் காண்பதெங் கே?நன்றான செயல்புரிய நாள்பார்க்கத் தேவையில்லை;உன்னதநல் வெற்றியே உனதாகும்,--என்றென்றும்,நல்லவர்க்கு எந்தவொரு நாளுமே நன்னாளாம்;வெல்லும்சொல் இன்னதென விளம்பு!வில்கொண்டு போராடி வெற்றிதனைக் காண்பதினும்சொல்கொண்டு போராடி சுமூகமாய்--நல்லதொரு,தீர்வுதனைக் காண்பதன்றோ தீர்கமுற்ற செயலாகும்?கூர்மதியர் செயலென்றே கூறு!மெய்யானத் திறனின்றி மேதினியை ஆளவந்தபொய்யனாம் மோடிதனைப் போற்றுவரோ?--செய்வேனெனசொல்வதனை முடிக்கத்தான் சூரனென்பார் மக்களெலாம்;வெல்லும்சொல் உண்டாமோ வேறு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.