கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சட்டம்: -பெருமழை விஜய்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

சட்டமா
தமிழ் நாட்டிலா?!
அதைத்தான் கொளுத்தி விட்டார்களே!

நியாயமா?
நம் நாட்டிலா?!
அதைத்தான் புதைத்து விட்டார்களே!

நேர்மையா?
இந் நாட்டிலா?!
அதைத்தான் விற்று விட்டார்களே!

கர்ப்பிணிப் பெண்ணின்
கருக் கலைத்த காவலரை...
சட்டம் என்ன செய்யப் போகிறது?

தடி எடுத்து
வாகனம் உடைத்தவர்கள்
காவலர் என்பதே களங்கந்தானே?!

ஆட்டோவை...
மீன் கடைகளை...
எரிப்பதற்குத்தான் காவலர்களா?!

காக்கிக்குள்...
இதயத்திற்குப் பதிலாய்...
இரும்பையா இறைவன் வைத்தான்?!

அரசாங்கம்...
காவல் துறை எதுவும் 
எங்களுக்கு வேண்டாம்!

நாங்கள்...
உழைத்துச் சம்பாதித்ததே...
எங்களுக்கு
உதவ வில்லையே!

சட்டம்...
அரசு... இவையெல்லாம்
சந்தர்ப்ப வாதங்கள்!

ஏழைகள்வாழ்வில் என்றுமே 
கனத்த இருள்தான்!

காப்பாற்றும்
சட்டமென்று நினைத்தால்...
மிஞ்சுவது சங்கடங்களே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.