சட்டம் : சங்கீதா


வேண்டும் எங்களின் உரிமகள் என்று
மீண்டும் ஒன்றன சேர்ந்தோம் அன்று !
தமிழர் எழுச்சியைப் பார்க்கக் கண்டு
மகிழார் நாட்டினில் யார்தான் உண்டு ?
ஜல்லிக் கட்டுக்கொரு சட்டமென
சொல்லிக் கோஷமிட்டு வந்தவனை
கண்டிட்டுப் பயந்தது ஆட்சி
கொண்டுவந்த சட்டமே சாட்சி !
இருக்குது நாட்டினில் பலதிட்டம்
அதற்கு உள்ளது பலசட்டம !
ஓங்கிப் போட்டார்கள் கோஷம்
இறுதியில் செய்வாரோ மோசம் ?
காந்திவழிப் போராட்டம் போலே
சாந்திகாத்த இளைஞர்கள் மேலே
முடிவில்செய்த தாக்குதல் கண்டு
நொடியில்தெய்வம் நீதி தராதோ ?
காந்திவழிப் போராட்டம் போலே
சாந்திகாத்த இளைஞர்கள் மேலே
நீங்கள்செய்த தாக்குதல் கண்டு
கண்கலங்கார் யார்தான் உண்டு ?
சட்டம் இயற்றிட வேண்டுமென
திட்டம் போட்டு வந்தவனை
அடித்தே நொறுக்கியக் காட்சிகண்டு
வெடித்தது எந்தன் நெஞ்சமின்று !
கடலில் கூட்டம் போடக்கூடாது என்று
மடல்தனைக் காட்டியது காவல்துறை இன்று !
நெடுநாள் காந்திசெய்தப் போராட்டமும்
அதனால் பெற்ற சுதந்திரமும் தப்புதானோ ?
நிறையவே சட்டங்கள் நாட்டினில் உண்டு !
பெரியதோர் ஓட்டையை அதனில் கண்டு
ஆட்சியில் உள்ளவர் தப்பிக்கப் பார்ப்பது
மாட்சியே இல்லாச் செயலென ஆகுது !
சட்டத்தைக் காத்திட வேண்டுமென் பவரே
சட்டையை மாற்றல்போல் மாற்றிட லாமா ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...