கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சட்டம் : கே.நடராஜன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

திட்டம் போட்டு தீட்டும் சட்டம் சுற்றும் 
ஒரு வட்டத்துக்குள் !  வட்டத்தை 
தாண்டி கால் வைக்காதவரை 
சட்டம் தண்டிக்காது !  இது 
சட்டத்தின் நீதி ! சட்டத்துக்காக 
பட்டம் எதுவும் பெறாத ஒரே 
சட்டம் ஒருவரின் மனசாட்சி !
மனசாட்சியின்  அரசாட்சி ஒரு 
வட்டத்தில் சுற்றாது ! எது நியாயம் 
எது தர்மம் என குரல் கொடுப்பது 
மனசாட்சி மட்டுமே ! தம்பி நீ 
இப்போது சொல்லு ... சட்டம் சொல்லும் 
நீதிக்கு தலை வணங்கினால் மட்டும் 
போதுமா ... இல்லை .. உன் மனசாட்சியின் 
குரல் சொல்லும் நியாயம்  தர்மத்தின் வழி 
நீ நடக்க வேண்டுமா  வேண்டாமா ? 
மனிதன் போடும் சட்டம்  நம் மனசாட்சியின் 
முன்னே  ஒரு காகிதப் பட்டம் ! 
நீதியை மீறவேண்டாம் நீ ... அதே சமயம்  
மறக்கவும் வேண்டாம் நீ எது நியாயம் 
எது தர்மம் என்று  உன் வாழ்க்கையில் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.