சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

எதிர்காலம்: லூர்து எஸ் ராஜ்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

எதிர்காலம் கேள்விக்குறி ஆகிடுமோ திறன்மிகு
இளைஞர் நாட்டையாளும் வலிமை பெற்றால்?
சதிராடும் போர்க்களம் போல் மக்கள் கூட்டம்
சல்லிக் காசுக்காக வங்கிமுன் திரண்டிடுமோ?

உழவர்குடி பெருமக்கள் நாள்தோறும் வயலை
உற்றுப் பார்த்து  மறுநொடியில் மாண்டிடுமா?
இழவு வீடாய் மாற்றிடத்தான் இந்த நாட்டை
இளைஞர்குழு எந்நாளும் விட்டிடுமா?

நம்பிக்கை நட்சத்திரம் இளைஞரல்லோ இந்த
நாட்டின் காவல் தெய்வம் வேறெவரோ?
நம்பி மோசம் விழைக்கின்ற பகைப்டையை
நாசம்செய்யும் வீரக்குலம் அவர்க ளன்றோ?

அந்திவானின் ஒளிக்கீற்றே அற்புதத்தை நிகழ்த்தவா?
அறிவியல் விண்ணியல் பொருளியலும்  பயின்றநீ
அரசியலை மாற்றிவைக்க இன்றேவா,  ஊழல்
ஆட்சியை வேரறுக்க வீறு கொண்ட வீரா வா.

எதிர்காலம் உன்னதன்று எழுந்துவா இதுபோல்
எந்நாளும் நடந்ததில்லை; அறிந்துவா ; உன்னால்
வருங்காலம் வல்லரசாம் நம்பிவா; கீழ்வானில்
இருளகற்றும் ஒளி விளக்கே விரைந்து  வா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.