முன்னாள் வீரர் அஸ்வின் பயிற்சியாளர் பிடாக் எனும் பிரசன்னாவின் உரையாடலில் வெளிப்பட்ட சர்ச்சையான கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணியின் துரந்தராக வேலைப் பார்த்தது யார் என்ற கேள்வி சமூக வலைதளத்தில் தீயாகப் பரவி வருகிறது.
தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்?
இந்நிலையில் பிடாக் அஸ்வின் உடனான யூடியூப்பில் பேசியிருப்பதாவது:
மார்க்ரம் முதல் ஓவர் வீசுகிறார். டாஸ் வென்று பேட்டிங்கே விளையாடாத தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் விளையாடுகிறார்கள். அப்படியென்றால் தளபதி விஜய் சொல்வதுபோல இதைச் சொல்லிக்கொடுத்தவன் உள்ளேயே ஒருத்தனாகவும் இருக்கலாம் அல்லது இந்தியாவில் இருக்கும் ஒருத்தனே உனக்கு ஆப்பு வைத்தாகவும் இருக்கலாம் என்பார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த அஸ்வின், “டேய் என்ன சொல்ற நீ?” என்பார். அதற்கு பிடாக், “நான் சொல்லி முத்துவிட்டேன். புரிந்துகொண்டவன் பிஸ்தா” என்பார்.
பின்னர், அக்ஷர் படேல் தேர்வு செய்யாததும் வாஷிங்டன் சுந்தரைத் தேர்வு குறித்தும் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை எடுத்த விதம் குறித்தும் பேசினார். இது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
பிரசன்னா யாரைக் குறிப்பிடுகிறார்?
இந்தியாவின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் தெறி படத்தில் இடைவேளைக் காட்சியில் வரும் வசனம் போல பிடாக் பேசியதால் அது ஒருவேளை அவரைப் பற்றிய பேச்சா என்றே தெரியாமல் அஸ்வின் குழம்பினார். அஸ்வின் மட்டுமல்லாமல், சமூக ஊடங்களே இது குறித்து பேசி வருகிறது.
சமீபத்தில் துரந்தர் எனும் படத்தில் ரன்வீர் பாகிஸ்தானுக்கு ஒற்றனாகச் சென்றிருப்பார். அதனால், தென்னாப்பிரிக்க அணிக்காக வேலைப் பார்த்தது யார்? இந்திய வீரர்களின் பலவீனங்களை யார் கூறியிருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Summary
Who is the SA Dhurandhar? Pdogg prasanna video viral on social media south africa hreatest won
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துரந்தர் 2! திரிதேவ் படத்தின் பாடல் அனுமதியின்றி பயன்படுத்தியதாக வழக்கு!

சிஎஸ்கே அணிக்கு ஆலோசகராகும் கெவின் பீட்டர்சன்? கோரிக்கையும் கிண்டலும்!

சமூக ஊடகங்களிலிருந்து விலகினார் விஷ்ணு விஷால்!

ஆஸ்திரியாவில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



