திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

இந்திய பேட்டர்கள் அகந்தையை கைவிட வேண்டும் - சுனில் காவஸ்கர்

"இந்திய பேட்டர்கள் தங்களின் அகந்தையைக் கைவிட்டு, எதிரணியின் இன்னிங்ஸிலிருந்து கற்றுக்கொண்டு சூழலுக்கு ஏற்றவாறு விளையாட வேண்டும்' என்று ஜாம்பவான் சுனில் காவஸ்கர் அறிவுறுத்தினார்.

News image
இந்திய முன்னாள் வீரர் சுனில் காவஸ்கர்
Updated On :23 பிப்ரவரி 2026, 10:41 pm

தினமணி செய்திச் சேவை

"இந்திய பேட்டர்கள் தங்களின் அகந்தையைக் கைவிட்டு, எதிரணியின் இன்னிங்ஸிலிருந்து கற்றுக்கொண்டு சூழலுக்கு ஏற்றவாறு விளையாட வேண்டும்' என்று ஜாம்பவான் சுனில் காவஸ்கர் அறிவுறுத்தினார்.

டி20 உலகக் கோப்பை போட்டியின் லீக் சுற்றில் தொடர்ந்து 4 வெற்றிகளைப் பதிவு செய்த நடப்பு சாம்பியனான இந்தியா, சூப்பர் 8 சுற்றில் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் ஞாயிற்றுக்கிழமை 76 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா, பவர்பிளேயின்போது 20 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது இணைந்த டெவால்டு பிரெவிஸ் } டேவிட் மில்லர் கூட்டணி, 4}ஆவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டது.

பின்னர் தனது இன்னிங்ûஸ விளையாடிய இந்தியாவும் பவர்பிளேயில் 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், அதன் பிறகு வந்த பேட்டர்களும் நிலைக்காமல் வரிசையாக அடுத்தடுத்து வெளியேற, இந்தியா தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில், இந்தியாவின் ஆட்டம் குறித்து முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸில் இருந்து இந்தியா கற்றுக்கொள்ளவில்லை. களத்துக்கு வந்த இந்திய பேட்டர்கள் அனைவருமே, தாங்கள் சந்தித்த எல்லா பந்தையுமே பவுண்டரி விளாச விரும்பினர். டி20 கிரிக்கெட்டை அப்படி விளையாடி விட முடியாது.

தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் பிரெவிஸ் } மில்லர் நல்லதொரு பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். இந்திய பேட்டர்களும் அத்தகைய உத்தியுடன் விளையாடியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. அதீத நம்பிக்கையுடன் பேட்டை விளாசிவிட்டு விக்கெட்டை இழந்து வெளியேறினர். சவாலாக இருக்கக் கூடிய ஆடுகளத்தில் எதிரணி நன்றாக ஸ்கோர் செய்யும்போது, அகந்தையை விடுத்து அதன் ஆட்டத்தை கவனித்து, அதற்கேற்றாற்போல் நமது ஆட்டத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும். வழக்கமாக ஆட்டத்தின் தன்மையை உணர்ந்து விளையாடும் திலக் வர்மா, இந்த ஆட்டத்தில் முற்றிலும் ஏமாற்றமளித்தார். முதல் ஓவரில் இஷான் கிஷண் டக் அவுட் ஆகியிருக்கிறார். மறுபுறம், அடுத்தடுத்து டக் அவுட்டாகிய அபிஷேக் சர்மா இருக்கிறார்.

இந்த நிலையில் திலக் வர்மா சிறிது நேரம் எடுத்துக் கொண்டு பார்ட்னர்ஷிப் அமைத்து, பவர்பிளேவை கடந்து நிலைக்கும் வகையில் விளையாடியிருக்க வேண்டும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அப்போது ரன் ரேட் தேவையானது 9.5 தானே தவிர, 15 அல்ல.

பவர்பிளேயில் எப்போதுமே 70 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 55}60 ரன்கள் சேர்த்து நல்லதொரு அடித்தளம் அமைத்துக் கொண்டு அதன் பிறகு தொடரலா ம். ஆனால் இது எதையும் கருத்தில் கொள்ளாத வகையிலான இந்திய பேட்டர்களின் ஆட்டம் தான், அணியின் தோல்விக்கு வழிவகுத்தது என்று சுனில் காவஸ்கர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.