எதிர்காலம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

எதிர்காலம் பற்றியொரு சிந்தை யின்றி எச்சத்தார் வாழவழி செய்தி டாமல்முதியோரின் சொல்தன்னைச் கேட்டி டாமல் முன்துவர்க்கும் நெல்லியெனத் தள்ளி விட்டோம்கதியிழந்து போயிடுவோம் இயற்கை தன்னைக் காக்காமல் விட்டுவிட்டால் என்று சொன்னால்மதியாலே வென்றிடுவோம் என்று சொல்லி மாற்றத்தால் அழிவுதனை வரவ ழைத்தோம் !காற்றுதன்னை மாசாக்கிப் பூமி தன்னை கனலாக்கி ஓசோனை ஓட்டை யாக்கிஆற்றினிலே மணலெடுத்துக் கழிவு சேர்த்தே ஆழ்துளையில் நீரெடுத்து காலி செய்துநாற்றுநட்டு முப்போகம் விளைத்த மண்ணை நாகரிக மோகத்தால் மனைக ளாக்கிநேற்றுவரை தூய்மையாக இருந்த வற்றை நேராகக் கூற்றுவன்கை கொடுத்து விட்டோம் !அறிவியலில் வளர்ந்தடுத்த கோள்கள் கண்டும் அடுத்துள்ள நாடுகளில் பகைவ ளர்த்தோம்வெறிகொண்டு நமக்குள்ளே சாதி மதத்தால் வேறாகி உயிர்பலிகள் நடத்து கின்றோம்தறிகெட்ட அரசியலார் நாடு தன்னைத் தன்னலத்தால் தமதாக்க எதிர்த்தோம் இல்லைநெறிமாறி பண்பாடு ஒழுக்கம் மாறி நேர்மைநீதி பாழ்படவும் பார்த்து நின்றோம் !மரம்வைத்துப் பலன்கனினை நமக்க ளித்த மாண்பான முன்னோர்கள் வழியில் நின்றேஅரம்போன்ற கூரறிவில் இயற்கை காத்தே அற்புதங்கள் நிகழ்த்திட்ட அறிவி னோடேகரமழுக்கின் அரசியலார் பிடியி ருந்து காப்பாற்றி நல்லவர்கை நாட ளித்துவரமாக பெற்றே; நாம் வாழ்ந்த வாழ்வை வழங்கிடுவோம் வருங்கால சந்த திக்கே !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...