எதிர்காலம்: -பெருமழை விஜய்,


எதிர்மறை எண்ணத்தோர்க்கு
எதிர்காலம் இருட்டேயாகும்!
நேர்மறை எண்ணங்கொண்டோர்
நெஞ்செலாம் ஒளியேதோன்றும்!
நிதர்சனம் என்னவென்றால்
நிச்சயம் இரண்டுமில்லை!
இரவும் பகலும்போல
இதுபாதி அதுவும்பாதி!
இன்றைய நிலையிலிங்கு
எதுவுமே சரியாயில்லை!
ஒளியுந் தெரியவில்லை
உண்மையும் வாழவில்லை!
இயற்கையும் உதவ வில்லை
இருப்போரும் கொடுக்கவில்லை!
உழைப்போரும் உயரவில்லை
உத்தமர்க்கு மதிப்புமில்லை!
துணிவுடன் செயல்பட்டாலே
துய்க்கலாம் உலகவாழ்வை!
உறுதியாய் உழைத்திட்டாலே
ஒளிர்ந்திடும் உன்னெதிர்காலம்!
பரிதியாய் பரிணமித்தாலே
பகைவர்கள் ஒடுங்கிப் போவர்!
இறுதியாய் நீயே வெல்வாய்
இனித்திடும் இங்கெதிர்காலம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...