சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

எதிர் காலம்: பூ. சுப்ரமணியன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

தாய்மை அடைந்த பெண்ணுக்கு
குழந்தை பிறக்கும் வரை
அது ஒரு கஷ்டகாலம்
தவழும் குழந்தை – பெண்ணுக்கு
பிறந்து விட்டால்
அந்த தாய்க்கு
அதுதான் எதிர் காலம் !

பள்ளியில் கல்லூரியில்
படிக்கும் மாணவனுக்கு
பரீட்சை வந்து விட்டால்
பயத்தில் தேர்வுக்காய்ச்சல்.
படித்த கேள்விகளே
எழுதும் பரீட்சையிலேவந்து விட்டால்
அந்த மாணவனுக்கு
அதுதான் எதிர் காலம் !

கருத்தொருமித்த காதலர்கள்
திருமணம் முடிக்கும் வரை
காதலுக்கு ஒரு கஷ்ட காலம்  
பெற்றோர் சம்மதத்தில் 
மணம் செய்யும் காலம்
வந்து விட்டால்
அந்த காதலர்களுக்கு  
அதுதான் எதிர்காலம் !

காசி ராமேஸ்வரம் தீர்த்தம்
கோவில் குளம் சுற்றும்
கும்பிடும் ஆன்மீகவாதிக்கு  
விரும்பும் மனஅமைதி
கிடைத்து விட்டால்
அந்த ஆன்மீகவாதிக்கு
அதுதான் எதிர்காலம்

படிக்க வைத்த பெற்றோர்கள்
வாழ்வில் மகிழும்படி
பிள்ளைகள் பெற்றோரைக்
கண்கலங்காமல்
கவனித்துக் கொண்டால்
அந்தப் பெற்றோருக்கு
அதுதான் எதிர்காலம் !

மனிதர்கள்...
நிகழ்காலத்தை நினைப்பதில்லை
இறந்தகாலம் மறந்து விடுவான்
எதிர்காலம் நினைத்து ஏங்குவான் !

மனித மனங்கள்  
நிகழ்காலம் எண்ணி வாழ்ந்தால்
அவனுக்கு
அதுதான் எதிர்காலம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.