புதிய டைரி : கவிஞர் மா.உலகநாதன்


எழுதிப்பாராதவன் வாழ்க்கை
கழுதை புரண்ட களம்,
எங்கேயோ படித்த வாசகம்;
ஏக்கத்துடன் காத்திருக்கிறது என்முன்னே
புதிய டைரி .
இவன்,
கற்றதை எழுதுவானா?பெற்றதை எழுதுவானா?
மற்றதைஎழுதுவானா?
ஏக்கத்துடன் காத்திருக்கிறது என்முன்னே
புதிய டைரி .
நாளின் பதிவுகளை நாள் சென்று பார்க்கும்போது
நமக்குள்ளே பல உணர்வலைகள்;
சில பதிவுகள் வரலாறாகும்,
சிலவோ சிலைமேல் எழுத்தாகும்;
புத்தாடை,புது உறவு ,புதுடைரி
ஆசையெல்லாம்
ஆண்டுத்துவக்கத்தில் அலைமோதும் !
பூண்டு முடிந்துவிட்டால் புதுவேகம் குறையும்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...