புதிய டைரி : பூ.சுப்ரமணியன்


புத்தாண்டில்
புத்தம் புதிய டைரியை
புரட்டிப் பார்க்கும்போது
புதுமணம் பரப்பியது
ஓர் இனிய அனுபவம் !
ஆயிரம் எண்ணங்கள் உதயம்
அவைகள் உதயமானதோ
துடிக்கும் ஓர் இதயத்திலே !
பலவித வண்ணங்களில்
வெவ்வேறு வடிவங்களில்
உருவான புதிய டைரிகளில்
வண்ணங்கள் மாறலாம்
வடிவங்கள் மாறலாம் – அதில்
நாள் கிழமைகள் பதிவுகள்
எல்லாமே ஒரேவிதந்தான்
மாறுவதில்லையே !
புத்தாண்டில்ஆன்மீக அன்பர்கள்
அன்பாக அளவளாவி
இன்பமாக அளித்து மகிழ்வது
புதிய ஆன்மீக டைரிகள் !
காதலர்கள் உள்ளங்களை
பரிமாறிக் கொள்வதுபோல
புத்தாண்டில் புன்னகையுடன்
காதல் சின்னங்களுடன்
கொடுத்து மகிழும் டைரி
காதலர்கள் டைரிகள் !
அரசுத்துறை சங்கங்கள்
ஆண்டுதோறும் மாறும்
அரசாணை விதிமுறைகளை
ஆர்வமுடன் பதிவு செய்து
அனைத்து உறுப்பினர்கள்
படித்து பயன்பெற கொடுத்து
மகிழும் சங்க டைரிகள் !
மனிதநேயம் பரவவும்
புதுமைகள் தோன்றவும்
இனிமைகள் காணும்
உயர்ந்த கருத்துகளை
நமது புதிய டைரியில்
மட்டுமல்லாமல்
மலரும் புத்தாண்டில் – நம்
உள்ளங்களிலும் தவறாமல்
பதிய வைப்போம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...