புதிய டைரி : கே. நடராஜன்


புது ஆண்டின் புதிய வரவு புதிய டைரி
புது நாட்காட்டியுடன் ...புது சட்டை மணத்துடன் !
புதுப் புடவை பொலிவுடன் ! அழகுப்
பதுமையென அதை ரசித்து அதன்
பக்கங்களைப் புரட்டும் நேரம் புது
டைரி அதற்கு ஒரு பெருமை ...
கர்வமும் கூட ! புது டைரிக்கு தெரியாது
அதன் "புது டைரி" வாழ்வு சில வாரங்களே
என்று ! நாட்குறிப்பு எதுவும் பதியாமல்
புது டைரி எடுக்குமே பல அவதாரம் !
வீட்டுப் பிள்ளைக்கு நோட்டுப் புத்தகமாக!
வீட்டுப் பெண்மணிக்கு சமையல் குறிப்பு
நோட்டாக ...வீட்டுக் கணக்கு , பால்
கணக்கு நோட்டாக ...இருந்தாலும் அது
புது டைரி...புது டைரிதான் ! வேறு ஒரு
புது டைரி அந்த வீட்டுக்கு வரும் வரை !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...