நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

அரியாசனம் :  கே.நடராஜன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

அரியாசனம்  கொள்ளவேண்டும் பெருமை தன்
மேல் அமரும் தலைவன் முகம் பார்த்து !
தலைவன் அவனும்  சிந்திக்கவேண்டும் இந்த
அரியாசனத்துக்கு  தானும் பெருமை
சேர்க்க வேண்டும் தன் நன்னடத்தையால் என்று !
தலைவனுக்கு அரியாசனம் தரும் பொது சனம்
ஏதும் அறியா சனம் அல்ல ! ஒரு ஜடமும் அல்ல !
அரியாசனம் ஒரு தலைவனுக்கே  நிரந்தரமும் இல்லை !
புரிய வேண்டும் ஒரு உண்மை தலைவனுக்கு ..
அவனை அரியாசனத்தில் அமர்த்துவதும்  பொது ஜனம்
அரியாசனம் அவனுக்கு சரியாசனம் இல்லை என்றால்
சரியான தருணத்தில் தலைவன் அவனை கீழே
இறக்கி விரட்டி அடிப்பதும் அதே பொது ஜனம்தான் என்று !
இதை மறக்காமல் இருந்தால் சிறக்கும் ஒரு தலைவனின் 
நல்லாட்சி !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.