கோடை மழை: கவிஞர் " இளவல் " ஹரிஹரன்


கொளுத்தும் வெயிலில்
கோடை மழை ஒரு வரம்
மனிதம் பொய்ப்பதால்
மழையும் பொய்க்கிறது,
வரங்களெல்லாம்
சாபங்களாய் மாறுகின்றன.
கொடுப்பதும் கெடுப்பதும்
மழை தான் எனில்
இந்த மழையினையே
அடுத்துக் கெடுப்பதும்
மனிதர்களே..........
நிழலுக்கும் வேர்க்கும்
கடும் வெயில்தான்,
மருந்துக்கும் மரத்தை
விட்டு வைக்காததால் தான்.
கானல் நீர் தான்
கண்களை ஏமாற்றும்
கண்முன்னேயே
இயற்கையை ஏமாற்றும்
மனிதர் தான்...
இருக்கின்ற அணைநீர்
ஆவியாகாமல் இருக்க,
பத்து இலட்சம் செலவில்
முந்நூறு தெர்மாகோல் அட்டைகள்
அணையை மூடக்கூடுமோ.....
பாவம் இயற்கை
பரிதாப மனிதர்கள்.....
இவர்களுக்குக்
கோடைமழை வேண்டுமோ
குதூகலிக்க.........!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...