கோடை மழை: எஸ். போதனா


கோடை மழையே வந்திடுவாய்!
கோடை வெப்பம் தணித்திடுவாய்!
மாலை வேளைதனிலே முகிலாய் முரசொலிப்பாய்!
நிலத்தின் வெப்பம் தணித்திடவே
நிற்காமல் பெய்து ஓடிடுவாய்!
கோடையின் கோபம் போக்கிடவே
கோவில்களில் கம்பம் நட்டிட்டால்
குதுகலமாய் விரைந்தே வந்திடுவாய்!
பதுங்கிய ஜந்துக்கள் படையெடுக்கும்
ஒதுங்கிய நோய்கள் நலம் விசாரிக்கும்
திடீர் விருந்தாளியாக வந்திடுவாய்!
தீரா இன்பம் அளித்திடுவாய்!
வெம்மை போக்கி தந்திடுவாய்!
எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திடுவாய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...