பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

சூரியதாகம்: பாவலர் கருமலைத்தமிழாழன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

பட்டுப்போல்    இருக்கின்ற   குழந்தை   உடலைப்            பவளம்போல்    சிவக்கவைத்தே    எரியச்   செய்தாய் !திட்டுதிட்டாய்க்    கொப்புளங்கள்     எழுப்பிப்    பஞ்சுத்            திருமேனி    முழுவதுமே     புண்ணாய்    செய்தாய் !கொட்டுகின்ற     வியர்வையிலே    குழந்தை    மேனி            கொதித்திடவே    அழுகையிலே    துடிக்கச்    செய்தாய் !சிட்டுபோல    அங்குமிங்கும்    நடந்து   கன்னச்            சிரிப்புதிர்த்த    முகந்தன்னைக்    கறுக்கச்     செய்தாய் !மரங்களினை    மொட்டையாக்கி    வீசும்    காற்றை            மண்தரையை    சூடேற்றி     நெருப்பாய்    மாற்றிவிரலளவு    நிழல்கூட    விழாம     லாக்கி            விளையாடச்    சிறுவர்க்குத்    தடையாய்   நின்றாய் !சிரம்வெளியே    காட்டுதற்குப்     பெரியோ   ரையும்            சிந்திக்க     வைத்துவீட்டுள்    முடக்கி   வைத்தாய் !வரமாகப்    பிள்ளைபேறு     பெற்ற   பெண்ணை            வயிற்றுடனே     பெருமூச்சில்    நெளிய    வைத்தாய் !குளத்துநீரை    வற்றவைத்தாய்   பரந்தி    ருந்த            குளுமையான     ஏரியையும்    காய   வைத்தாய்களத்துமேட்டுப்   புல்கருகப்     பறவை    யெல்லாம்            கண்மயங்கி   நாவறளச்   சுருண்டு    வீழவளமுடையோர்    குளிர்பதன    அறைக்குள்     தங்க            வறுமையாளர்    வயிற்றுக்காய்     உழைக்கக்    கண்டும்உளந்தன்னில்     இரக்கமில்லாக்     கயவர்    போல            உக்கிரமாய்    சூரியன்நீ    தீய்த்தல்    நன்றோ !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.