சூரிய தாகம்: சீர்காழி .ஆர் .சீதாராமன்


"காலம் காலமாக மனிதர்கள்
விலங்குகள் உயிரினங்கள்
மாறினாலும் தான் மட்டும்
பாதை மாறாத வழுவாத
ஒப்பில்லா உழைப்பாளியே "
" காலை நேரத்து இளங்கதிர்
உதயசூரியனும் மாலை
நேரத்து அடிவானத்தில்
மறையும் சூரியனும் காண
கண்கோடி வேண்டும் என்றும் "
தாக்கம் அல்ல சூரியன்
தாகம் பெருகும் அணுக்கதிரே"
"பசும்தளிரும் பசுமையும்
பூத்துக்குலுங்க நறுமணம்
மண்வாசனை பரவ, கடல்நீரை
ஆவியாக்கி மழை பெய்யச்
செய்யும் இயற்கை விஞ்ஞானி,
தாகம் தீர்க்கும் சூரியன் "
" உன்னை தேடும் நாட்களும் உண்டு
உன்னை சாடும் நாட்களும் உண்டு
றட்சி தாகம் தாக்கம் உச்சம் நீச்சம்
என்பதெல்லாம் உன் பருவ
முதிர்ச்சி திருவிளையாடளோ
கதிரவனே செங்கதிரோனே ?"
" நீ இல்லாமல் ஓர் அணுவும்
அசையாது என்பதை நித்தம்
சுட்டிக்காட்டி, அடிமனதில்
என்றுமே மக்களின்
மோகத்தை தாகமாக உன்
பக்கம் சாய்த்த கதிரவனே
சேவகனே சிரஜ்ஜிவியே
வாழ்க வளர்க ..சூரிய தாகம்"
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...