கைகோர்ப்போம்: லூர்து எஸ் ராஜ்


ஒருகை ஓசை ஒலிப்பதில்லை –இங்கு
இருகையோசையை எதிர் ப்பதில்லை
ஆயிரம் கைகள் கூடிவிட்டால் –அநீதி
அஞ்சாமல் எழுந்து நிற்பதில்லை.
கைகளின் சக்தி மகத்தானது-அது
சாதி சமயக் குறியில் லாதது
உழைக்கும் கைகள் உறுதியானது –அது
உலகுக்கு குழைக்க மறுத்திடாதது
நெசவாளர் குயவர் கூலியென – அதன்
நிலையினைப் பிரித்திட வியலாதது
கைகளை உயர்த்திப் போராடுவோம் –உழவர்
உரிமைக் குரலதை ஒலித்திடுவோம்
இளைஞர் பெண்கள் முதியவர் –என
எல்லாரும் சேர்ந்தணி வகுத்திடுவோம்,
எங்கு நடந்தாலும் அநீதிதான் – அதை
எப்போது நடந்தாலும் கூடி எதிர்ப்போம்.
வல்லான் கொடியனைக் கண்டஞ்சிடோம் –இனி
வாய்பொத்தி கைகட்டி நின்றிடோம்
இளங்காளையர் குழுவின் தலைமையிலே-நாம்
இழந்தன அனைத்தையும் மீட்டெடுப்போம் .
காலமும் தூரமும் தடையன்று –அதனால்
கடலோ கரையோ நடுத் தெருவோ
கணமே கூடுவோம் எதிர்த்திடுவோம் –ஒரு
கடலென அலைபோல் கைகோர்ப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...