திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நெல்லுக் கிறைத்தநீர்: ரீகன் •ஜெய்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

வரண்ட நிலம்
வயல்வெளி ஆகி
தானியம் ஆகும்
இரவு பகலாக
இறைக்கும் 
ஏற்றத்தால்...
திரும்பும்
திசையெல்லாம்
தென்னை, வாழைமர
தோப்புகள்
ஊருக்கே தாகம்
தணித்து வற்றாது நிறம்மியிருக்கும் 
என்றும்  
ஆழ்கிணற்றில் 
ஊற்றுநீர் ...
ஏற்றம் இறைப்பவருக்கு
வானொலி பாடும்
குருவிகள்...
கிணற்று
துளைகளிலே
அதன் கூடு ...

என செழிப்பான
சொர்கத்தை காட்டும்
ஊரை யெல்லாம்
இனி
காண இயலுமா ???
ஊர்
குப்பைகளால்
தூர்ந்துபோனது
பட்டறை கிணறெல்லாம்...
வீட்டு 
கொல்லைகளில்
மிஞ்சிய
கிணறுகளெல்லாம்
மலம் கழிக்கும்
கழிவறை (செப்டிக் டேங்க்) 
ஆகிபோனதுதான் 
காலக்கொடுமை....
இதை
காணும் உள்ளமோ ! 
கதறி அழுது புலம்புகிறது...
நெல்லுக் இறைக்க
நீரின்றி
ஏமாந்து
ஏங்கி நிற்கிறது ஏற்றம் ...
வாடி வதங்கி
தொங்குகிறது கயிற்றில் வாளி..
வான்மழை பொழியாமல்
காய்ந்து போன பூமியில்
வேர் இன்றி வாடிடும்
நிலையானது
மனித வாழ்க்கை....
தினம் தினம் திருடப்படும்
ஆற்று மணல்களாலும்
வனத்து மரங்களாலும்...                            

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.