திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நெல்லுக் கிறைத்தநீர்: ஆர்.அருண்குமார் 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

ஆனந்தம் நிறைந்திடும்!
செய்வனயாவும் சிறப்பாக இருப்பின்
சிர்மிகு வெற்றி நிச்சயம் கிட்டும்.
பொய்யுரை பரப்பினால் பாதகம்
போகாத ஊருக்கு வழி காட்டும்.
 
நல்லது செய்தால் நலமே கிட்டும்
நானிலம் போற்றிடும் நிச்சயம்.
அல்லது செய்வாருக்கு இன்னல்தான்
அசையாத சொத்தாகும் கேளாய்.
 
விளையாத நிலத்தில் நீரிறைத்தால்
வீணருக்கு உதவுதல் போலாகும்.
நெல்லுக்கு நீர் இறைத்தால்தான்
நிறைந்திடும் விளைச்சல் நிறைவாய்.
 
பொருளறிந்து பேசினால் இன்பமே
புரியாவிடில் விழலுக்கு இறைத் நீரே.
அருள்நிறைந்த மனதில் அன்புதந்தால்
ஆனந்தம் நிறைந்திடும் வாழ்க்கையில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.