எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நெல்லுக் கிறைத்தநீர்: அ.வேளாங்கண்ணி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

நெல்லுக்கிறைத்த நீர்
வீணாகப் போகாது
வாய்க்காலில் பாயும்போது
மண்ணைப் பதப்படுத்தும்

சிறுசிறு உயிர்களின்
தாகத்தை தீர்த்துவைக்கும்
நெல்லை விளைவித்து
விவசாயியை மகிழ்விக்கும்
வழியைக் காட்டிவிட்டால்
வேறுவழி செல்லாது

துளியும் சேதமின்றி
நன்மைமட்டும் செய்துவிடும்
அடிக்கும் வெயிலையும்
அமைதிப் படுத்திவிடும்
துடிக்கும் பயிர்களின்
மூச்சுக்காற்றாய் மாறிவிடும்

இந்நீரின் சலசலப்பு
சங்கீதம் போலாகும்
மண்வெட்டி மறுக்கும்வரை
தன்வழியே போயிருக்கும்
சேற்றுக்குள் ளிறங்கி
சேதாரம் ஆகாமல்
நாற்றை விளைவித்து
சோறாகி பசியாற்றும்
நீர்பாய்ந்த நிலமெல்லாம்
இன்றெங்கே போனதுவோ
செழிப்பான வயற்காடு
செறிவிழந்து ஆனதுவே
விவசாயம் மறக்கப்பட்டு
வேறுதொழில் பிறக்குதுவே
விவசாயி வாழாவிட்டால்
உலகம் வீழ்ந்துவிடும்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.