தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஜன்னல் நிலா: மீனா தேவராஜன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

நகர்புறம் வாழும் நான் நாகரீகத்தின் உச்சிலென்று
அடைப்பு வீட்டில் அடைந்து கிடக்கிறேன் நான்
ஜன்னல் வழி வான்பரவைப்படகு நிலவைக் கண்டேன்
எப்போதும் நீ அழகுபாரில்நீ உலா செல்ல
என் இளமைக்காலம்மனத்தில் ஊஞ்சலாட
இப்போது நான் அப்போதுபோல் இல்லை 
வெட்டவெளியில் வட்ட நிலாவைக் காணவில்லை
பட்டொளி மரநிழலில் கண்ணாமூச்சி ஆடவில்லை
வீட்டுமுற்றத்தில் உன் அழகில் நான் மயங்கவில்லை
வெள்ளித்தட்டாய் விண்ணில் உன் வலம் கண்டதில்லை
நிலத்தில் நான் இரவில் நடக்குங்கால் வெண்ணிலா
நீள்வானில்   இன்று என்னுடன்  வருகிறதாஎன்று
அண்ணாந்து பார்த்துத் தரையில் வரவில்லை உலா
விண்ணில் உள்ள உன்னை நேரே காண இயலா
விண்ணைத் தொடும் வியன் மதில் புறாக்கூடு
கண்ணுக்கெட்டா உயரத்தில் உள்ளது என்வீடு
முற்றமில்லா மூச்சுமுட்டும் வீட்டில் மாளாப்
பற்றால் பரவெளியில் பார்ப்பதுஜன்னல் நிலா
இற்றை ஜன்னல் நிலாவென்றாலும் நீ வெண்ணிலாவே
அற்றை முற்றத்து நிலாவென்றாலும் நீ விண்ணிலாவே
அன்றும் கண்டதும் அதே நிலா, இன்றும் காண்பதும் அதே நிலா
என்றும் மங்காது உன் அழகே! என்றும் குறையாது உன் ஈர்ப்பே!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.