தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஜன்னல் நிலா: பாவலர்  கருமலைத்தமிழாழன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

குழந்தையினை   இடுப்பினிலே   தூக்கி   வைத்துக்
    குளிர்ந்தகாற்று   வீசும்மாந்   தோப்பில்   நின்று
அழகான   நிலவுதனை    அன்று   காட்டி
    அன்னையவள்   ஊட்டிவிட்டாள்   அமுதை   அன்பால் !
புழக்கடையும்    முற்றமெல்லாம்   மாறிப்   போகப்
    பூஞ்செடிகள்    தோட்டமெல்லாம்   வீடாய்   மாற
நிழல்சூழ்ந்த    கட்டடங்கள்    தொகுப்பிற்   குள்ளே
    நிலவெட்டிப்   பார்க்கயின்றோ    வழியே   இல்லை !

சன்னலிலே   தெரிந்தநிலா   மரம்கீழ்   பாட்டி
    சாய்ந்துவடை   சுடுகின்றாள்   என்று   சொன்ன
முன்னோர்கள்    கதைமாய ;    மல்லை   கைப்பூ
    முன்னெடுத்து    மலையேறி    வாவா  என்ற
கன்னற்சுவைப்    பாடல்கள்    முரணாய்ப்   போகக்
    கற்பனையில்   அழகிற்கும்    தண்ணெ   ளிக்கும்
கன்னிமுக    உவமையாக்கிச்   சொல்லி    வந்த
    கவிதையெல்லாம்   பொய்யாகிப்   போன   தின்று !

அறிவியலில்   முன்னேறி    சன்னல்   தன்னில்
    அழகென்றே   கண்டுவந்த    நிலவுக்   கோளில்
பொறித்திட்டார்    கால்சுவட்டை !   மண்ணெ   டுத்துப்
    பொதிந்துள்ள    உண்மைகளை    ஆய்வு   செய்தார் !
அறிவாலே    அங்குவாழத்   திட்டம்   தீட்டி
    அகற்கின்று    முன்பதிவும்   செய்ய   லானார்
வெறியூட்டும்   மதச்சாதி    எல்லாம்   விட்டு
    வேர்போல   மனிதநேயம்    வளர்ப்போம்   அங்கே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.