தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஜன்னல் நிலா: கவிஞர். கு. நா. கவின்முருகு.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

காற்றோடு கீற்றாட கண்குளிர வீசுமொளி
ஆற்றோடை தண்ணீரில் ஆடிடுமே! - நாற்றாகி
நெஞ்சத்தில் சேர்ந்து நெகிழவும் வைக்குமே!

எஞ்சிய நேரமெல்லாம் ஏந்திழையும் - மஞ்சம்சேர்
முற்றத்தில் வந்த முழுநிலவோக் காய்ந்திடவே
சுற்றமொடு சேர்ந்து சுவைத்திடப் - பற்றிக்
களித்திடக் காய்ந்திடும் கானமழைப் போலே

அளித்திடுமே அன்பனைய யாவும்! - குளிர்ந்து
மகிழ்ந்திடவே என்னருகில் மார்பணைவாய் பெண்ணாய்
முகிழ்த்திடவே சேர்ந்த முகிலுமே! - ஆகிடுமே
நானணைக்கும் காதலாலே ஞாலமெல்லாம் நீயுமெண்ணில்

வாளைக் குமரியாய் வந்திடுவாய் - வேளை
மயங்கிடவே சேர்ந்திருக்க வந்துவிடு என்னுள்
தயங்கிடாது உள்ளம் தயைந்து.!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.