தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஜன்னல் நிலவு:  கவிஞர்  " இளவல் "  ஹரிஹரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

காதோரம் நரைத்தமுடி வெளிச்சங் காட்டும்
        கண்களின்கீழ் கருவளையம் மேகங் கூட்டும்
தேதிசெல தேதிசெல முதுமை கூடும்
        திசைபார்த்துத் திக்கின்றி அலையும் உள்ளம்
பாதையெலாம் முட்களெனப் பூக்கள் தீட்டும்
        பார்வையிலே முதிர்ந்துவிட்ட கனியைப் போல
ஆதரவாய் முதிர்கன்னிக் கமைந்து விட்ட
        அற்புதந்தான் வீட்டிலுள்ள ஐன்ன லாகும்.
ஜன்னல்வழி தோன்றுகின்ற நிலாவாய்க் காணச்
        சங்கடங்கள் தோன்றுதய்யோ கால வெள்ளப்
பின்னலிலே கரைகின்ற இளமை போகும்
        பேச்சளவில் திருமணத்தின் சுவையும் தீரும்
திண்ணையிலே அமர்ந்தபடி காணும் காட்சி
         தெருநோக்கும் ஜன்னலிலே விரியும் மெள்ள.
முன்னம்கண் கண்டகனா முடிவை நோக்கி
         முன்னேறக் காட்சிகளில் திருப்தி கொள்ளும்.
கைகோர்த்து நடந்துசெல்லும் புதுமண மக்கள்
         கண்பார்த்துக் காதலித்துப் பழகிடும் மக்கள்
மைவிழியால் பேசியபடி மயக்கிடும் மக்கள்
         வாரிசுகளாய் பெற்றெடுத்த குழந்தை மக்கள்
பையநடம் புரிந்தபடி பார்க்கும் போது
         போதாத தட்சணையால் வீட்டில் முடங்கி
கையறுநிலையாகவே வாழ்க்கை ஜன்னல்
         கம்பிகளைத் தேய்த்தபடி தேயும் திங்கள்.                    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.