மனம் எனும் மாயப் பேய்: வேலூர். மூ.மோகன்


அம்மாவின் விரல் பிடித்து
அங்காடி போனது கசந்தது;
இன்று..ஆறடி தள்ளியே பயணம்!
அப்பாவின் ஓட்டை மிதிவண்டி
அட்டகாச சவாரியும் வெறுத்தது;
-'ஸ்போர்ட்ஸ்-பைக்'கே இலக்கானது!
பள்ளி, கல்லூரி ஆசான்களிடம்
பாசமே அற்றுப் போனது;
- மெத்தப் படித்த 'தலைக்கனம்'!
காதலித்தவள் கண் கலங்க
பார்வை மற்றொன்றைத் தேடுது;
- ஊரெல்லாம் 'ஊர்வசி'கள் உலா!
'கால்கட்டு' போட்டால் சரியாகுமென
'மூன்று முடிச்சு'ம் போட்டாச்சு;
- மனம் சந்நியாசத்துக்கு ஏங்குது!
சொகுசு வாழ்க்கைத்தரம் வேண்டி
'சுத்த'க்கை சத்தமின்றி நீளுது;
- தண்டனைபற்றி கவலையில்லாது!
அத்தனைக்கும் மூல காரணம்
அல்பமாய் அலைந்து திரியும்
மனம் எனும் மாயப் பேயே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...